உண்மை நிலையை உலகிற்கு சொல்லுவோம்

கொரோனா பெருந்தொற்று நோயை கையாள்வதற்காக அமலாக்கப்பட்ட இந்த திட்டமிடாத பொது முடக்கத்தால், பல கோடி மக்களின் வாழ்வு சொல்லிலடங்கா இன்னல்களை சந்திக்கிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இன்னல்களை நேரடியாகக் காண்கிறோம். மக்களின் வாழ்வு நரக நிலையை எட்டி வருகின்றது.

இந்த ஊரடங்கினால் பலமடங்கு அதிகரித்துள்ள மற்றொரு நெருக்கடி “வேலையில்லா திண்டாட்டம்”. ஒரு பக்கம் பொருளாதாரம் முடக்கப்பட்டதால் பல கோடி மக்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். மறுபக்கம் ஊரடங்கை காரணமாக சொல்லி வேலை ஆட்களை குறைத்து லாபத்தை பெருக்கும் நோக்கத்தில் பல பெரும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இணைந்து நிற்போம், தீர்வு தேடுவோம்…

குரல் எழுப்புவதன் காரணம் என்ன?

வரலாறு காணாத வேலையின்மை

ஊரடங்கிற்கு முன்னதாகவே 8 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த வேலையின்மை விகிதம், ஏப்ரல் மாத இறுதியில் 25 சதவீதத்திற்கும் அதிகமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12.2 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். இதில் தமிழகமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் ஆகும் - தமிழகத்தில் ஏப்ரல் மாத நிறைவில் வேலையின்மை விகிதம் 50 சதவீதத்தினை எட்டியது.

இளைஞர்களுக்கே பாதிப்பு அதிகம்

வேலை இழந்தோரில் பெருமளவிலானோர் இளைஞர்களே! 20-29 வயதிலானோர் 2.7 கோடி பேரும், 30-39 வயதினர் 3.3 கோடி பேரும் வேலையிழந்துள்ளனர். முறைசார் துறைகளில் ஒப்பந்த முறை வேலைகள் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறு வேலைக்குச் சேரும் இளைஞர்கள், சட்ட பாதுகாப்பு மறுக்கப்பட்டு, அதிரடியாக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

எதிர்காலம் கேள்விக்குறி

இன்று பணியிலிருக்கும் பலருக்கும் வரும் காலங்களில் வேலை இருக்குமா என்ற கவலை எழுந்திருக்கிறது. IT துறையில் 1.5 லட்சம் வேலையிழப்புகள் வருங்காலங்களில் நேரலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் சிறிய தொழில்கள் பலவும் பெரும் நிறுவனகளுடன் போட்டியிட முடியாமல் நெருக்கடியால் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளது. பொருளாதாரம் மீண்டாலும், பலருக்கும் மீண்டும் வேலை கிடைப்பது கடினமாகவே இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அதன் கடுமை அதிகரிக்கும். புதிய வேலை நியமனங்கள் குறையும். சம்பளமும் குறைக்கப்படும்.

சம்பள குறைப்பு, பணி நேர நீட்டிப்பு

வீட்டிலிருந்தே பணி புரியச் செய்யும் பல தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களும் கால வரையறை எதையுமே பின்பற்றாமல் பணியாளர்களை பிழிந்தெடுக்கிறார்கள். அதிக நேர உழைப்பிற்கு அதிக ஊதியமும் வழங்கப்படுவதில்லை. சொல்லப்போனால் பல நிறுவனங்களும் ஊதிய குறைப்பை அறிவித்துள்ளன. 15%-லிருந்து துவங்கி 50% வரை ஊதிய வெட்டுக்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் இன்னல்கள்

நடுத்தர வர்க்கத்தில் வேலையிழந்த ஊழியர்கள் தங்களின் குழந்தைகளின் கல்விக் கடன், மருத்துவத்திற்கான கடன், வீட்டுக் கடன் இவற்றிற்கெல்லாம் மாதத் தவணை கட்ட வழியில்லை என்ற கவலையில் விழி பிதுங்கி நிற்கின்றனர். வரும் நாட்களில் படிப்பை முடித்து வேலை தேடவுள்ள இளைஞர்களின் மனதிலும் அச்சம் அதிகரித்துள்ளது. இளம் இந்தியர்களின் கனவுகள் கண் முன்னே சிதைந்து வருகின்றன.

முறைசார் தொழில்களிலும் வேலையிழப்புகள்

வேலையிழந்தோரில் 9.1 கோடி பேர் தினக்கூலி ஊழியர்கள் ஆவார்கள் அத்துடன் 1.7 கோடி மாதச்சம்பளம் பெறுவோரும், 1.8 கோடி சிறு வியாபாரிகளும் வேலையிழந்துள்ளனர். தகவல் தொழிற்நுட்ப துறையில் பெருமளவில் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. “Scroll” என்கிற ஆங்கில இணைய ஊடகம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி ஓலா, ஊபர், ஜொமாட்டோ, ஸ்விக்கி உட்பட பல பெரும் நிறுவனங்கள் தங்களின் பணியாட்களை 20% வரை குறைத்துள்ளன. சரமாரியான வேலை நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தவிர “Start-Up” எனப்படும் சிறு தொழில்கள் பலவும் கணக்கெடுக்க முடியாத அளவு பணியாட்களை நீக்கியும், மொத்தமாக மூடியும் வருகின்றன. ஊடகத் துறையிலும் பணி நீக்க நடவடிக்கை ஊரடங்கின் பெயரால் நடந்து வருவது வெளியுலகத்திற்கு தெரியாமலேயே உள்ளது.

இளைஞர் சமுதாயத்தின் குரல்கள் நம்மை ஆள்பவர்களை எட்டட்டும்

தனியார் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் கேட்டுக்கொண்ட பின்பும் பணி நீக்கங்கள் தொடர்கின்றன. வேலையிழத்த ஊழியர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்க, அரசு நம் வேதனைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

வேலையற்ற இளைஞர்களின் வலியை உலகம் அறியட்டும்!

வேலையற்ற இளைஞர்களின் வலியை உலகம் அறியட்டும்!

ஒன்றிணைவோம்! குரல் எழுப்புவோம்!

இன்றுள்ள நெருக்கடியின் அளவை நாட்டு மக்கள் உணரவில்லை. ஊடகங்கள் இதை முழுமையாக பேசவில்லை.

வேலை, வருமானம் இழந்ததால் நீங்கள் படும் துயரங்களை வெளிப்படுத்துங்கள். நமது துயரங்களை உலகம் அறியட்டும்!

உரக்கப் பேசு

உங்கள் தனிப்பட்ட விபரங்களை பாதுகாப்போம்

உங்களைப் பற்றி நீங்கள் அளிக்கும் தரவுகள் பாதுகாக்கப்படும். எந்த தரவுகளும் மூன்றாம் நபரிடம் நிச்சயம் பகிரப்படாது. தேவையில்லை என்று கருதும் தரவுகளை நீங்கள் அளிக்க வேண்டாம்.

ஒன்றிணைவோம்!

இந்த இணையதளம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், தமிழ்நாடு மாநிலக் குழுவின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது

அனுபவங்கள்

Job lost.. At the age of 42, I don’t know how I am going to get another job in this crisis. House rent, monthly expenses and school fees also there. Whole family under stress.. No other words to explain..

Spa & Fitness

Lay-Off

சாலையோர தொழில் என்னோடு போகட்டும் என்று படிக்க வைத்த தந்தையின் கனவு பொய்த்தது.

வேலையிழந்தவர்

Marketing

I as a small scale entrepreneur lost the whole business from March obvious tourism hasn’t hv any hope for the next 3 months atleast, as unorganized sector people like us suffered a lot.

Tourism Management

Company Closed

Am depending on this work only. Due to lockdown schools are closed there is no job for us. It makes increasing my depression day by day.

ஆசிரியர்

புதுச்சேரி

எங்களில் பலரும் பணியிழந்துள்ளோம்! எங்கள் வாட்சாப் குழுவில் 160க்கும் மேற்பட்ட வேலையிழந்தோர் உள்ளனர். என் மேற்பார்வையாளர் என்னை அழைத்து இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார். இரண்டுமே வேலையை விடுவதற்கான வாய்ப்புகள்.

சுர்ஜித்

வேலையிழந்த IT ஊழியர்

நான் ஒரு வக்கீல். என் மனைவி கீற்றுப் பின்னும் வேலை செய்கிறார். வருமானம் போதாததால் என் குடும்பப் பணியான கூடை பின்னும் வேலைக்கு திரும்பியுள்ளேன்.

உத்தம குமார்

வழக்கறிஞர், தஞ்சை.

இந்நேரத்தில் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவதும் ஊதியத்தை குறைப்பதும் நெருக்கடியை மோசமாக்கும். ஊழியர்களின் நிதி ஆதாரத்தை அழித்தது, மனதளவில் பாதிக்கும்.

ஊடகவியலாளர்கள்

செலவை குறைக்க பணி நீக்கப்பட்டவர்கள்